Monday, April 27, 2009

இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிப்பு

வன்னியிலிருந்து இலங்கை படைகள் வாபஸ் பெறப்படுவதாகவும் இனி மக்கள் மறுவாழ்வுக்கான பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
முதல்வர் கருணாநிதியின் சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என இந்திய அரசு வற்புறுத்தியது.இதைத் தொடர்ந்து போர் முனையில் படைகள் வாபஸ் பெறப்படும் என்றும், அதே நேரம் தற்காப்புக்கான தாக்குதல்கள் தொடரும் என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து சிஎன்என் நிருபர் தெரிவித்துள்ளார்.
இந்த போர் நிறுத்தம் தற்காலிகமானதுதான் என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வன்னிப் பகுதியில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்துதல், விமானத் தாக்குதல் அடியோடு நிறுத்தப்படும் என்றும், சிறு துப்பாக்கிகள் மட்டும் தற்காப்புக்கா பிரயோகிக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இனிமேல் எங்களது படையினர் புலிகளிடம் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மட்டுமே ஈடுபடுவர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தாக்குதலை முழுமையாக நிறுத்துவதாக இலங்கை கூறவில்லை. புலிகளிடமிருந்து தமிழர்களை மீட்கும் நடவடிக்கை என்ற பெயரில் இலங்கை ராணுவத்தின் தாக்குதல்கள் தொடரலாம்.
ஆனால், இலங்கை போர் நிறுத்தம் அறிவித்தது திமுகவுக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. ஆனால், இத்தனை காலம் காத்திருந்துவிட்டு தேர்தல் வரும்போது தான் இந்த உண்ணாவிரதத்தை நடத்தி தமிழர்களை காக்க முயன்றிருக்க வேண்டுமா என்ற கேள்வியும் திமுகவை நோக்கி எழுந்துள்ளது.
அதே போல இலங்கையை நெருக்க முடியும் என்ற நிலை இருந்தும் மத்திய அரசு ஏன் இவ்வளவு காலம் அமைதியாக இருந்தது என்ற கேள்வியும் காங்கிரசை நோக்கி எழுந்துள்ளது.
இப்போதைக்கு திமுகவும்-காங்கிரசும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், தேர்தல் நேரத்தில் இலங்கையில் மீண்டும் தாக்குதல் என்ற தகவல் வந்தால் அது இந்தக் கூட்டணிக்கு பெரும் பாதகமாக அமையும் என்பது நிச்சயம்.
எனவே வாக்குப் பதிவு முடியும் வரை, தாக்குதல் அடியோடு இருக்காது என்று நம்பப்படுகிறது.

Indians against genocide