Thursday, April 30, 2009

சிங்கள இனவெறி - ஜ.நா எடுத்த இரகசிய படங்கள்

ஜ.நா எடுத்த இரகசிய செயற்கைக் கோள் படங்கள் கசிந்துள்ளது திடுக்கிடும் தகவல்

சிங்கள இனவெறி அரசின் தமிழ் இன அழிப்பிற்கு, சாட்சியம் இல்லா போர்.(WAR WITHOUT WITNESS) என்று தான் பெயர் வைத்திருந்தது.... ஆனால் ஐ நா வில் தொலைத்தொடர்பு செயற்க்கைக்கோள் மூலமாக இபொழுது இலங்கையின் குட்டு வெளிபட்டிருக்கிறது....

இடம் பெயரும் மக்கள், கன்னி வெடிகளை தவிர்ப்பதற்காக வருசையாக செல்வதை இப்படத்தில் காணலாம்,
UNOSAT 6

முப்பரிமான தோற்றத்துடன் நிலப்பரப்பை துல்லியமாக படம் எடுக்கக் கூடிய ஜ.நா வின் செயற்கைக்கோளின் உதவியுடன், ஜ.நா மார்ச் 26 முதல் ஏப்பிரல் 26 வரை முல்லைத்தீவை இரகசியமாக படம் பிடித்து வந்துள்ள செய்தி தற்போது கசிந்துள்ளது.

அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ள இடத்தில 26-03-2009 அன்று இருந்த 800 க்கும் அதிகமான தற்காலிக குடியிருப்புகள் 19-04-2009 அன்று காணவில்லை....
UNOSAT 5

ஜ.நா தயாரித்து வந்த அறிக்கையானது தற்போது கசிந்துள்ளதால் பல புகைப்படங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் பல செயற்கைக்கோள் புகைப்படங்களானது போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

எறிகணை எறிகுண்டு தாக்குதல் நடந்த இடங்கள் ....
UNOSAT 4
ஒவ்வொரு நாளாக மக்கள் இடம்பெயரும் காட்சிகளும், இன்று இருந்த கட்டிடங்கள் நாளை அந்த இடத்தில் இடிந்து தரைமட்டமாக இருக்கும் காட்சிகளும் செய்மதியூடாக எடுக்கப்பட்டுள்ளது. பல அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. "சாட்சியம் அற்ற போர்" எனபெயரிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையில் மக்கள் வரிசை வரிசையாக இடம்பெயர்வதும் அவர்கள் இடம் பெயரும் சமயத்தில் வீழ்ந்து வெடிக்கும் குண்டுகளின் புகைமண்டலமும் தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்டுள்ள சாலையும், மண் அரண்களும், எறிகணைகள் விழுந்து பள்ளமான இடங்களையும் இந்த படம் காட்டுகிறது...
UNOSAT 3

புலிகளால் அமைக்கப்பட்டிருக்கும் மண் அரண் முதல் இராணுவத்தால் அமைக்கப்பட்டிருக்கும் முள்ளுகம்பி வேலி மற்றும் தடைகள் என்பன திட்டவட்டமாக காண்பிக்கப்பட்டுள்ளது.

கடும் விமானத்தாக்குதலால் ஏற்பட்டிருப்பதாக கருதப்படும் பாரிய குழி
UNOSAT 2

இவ்வறிக்கையானது இலங்கை அரசு போர் குற்றங்கள் புரிந்திருக்கிறது என்பதை நிரூபிக்க போதுமான அளவு சாட்சிகளை உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. புதுமத்தளான் மற்றும் கரையோரப்பகுதில் மக்கள் அமைத்திருக்கும் தற்காலிக குடில்கள் அவை பின்னர் அகற்றப்பட்டு இடம் மாறி இருப்பதுஇ எறிகணை வீச்சில் நிலப்பரப்புகள் குண்டும் குழியுமாக காணப்படுவது என்பனவும் முறையே இங்கு படம் பிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு குரியிட்டுக்குகாட்டப்பட்டுள்ள இடங்களில் மிகபெரிய விமான எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டு பல தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்
UNOSAT 1

Indians against genocide